கள்ளக்குறிச்சி
ஆய்வுக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்களுடனான காலாண்டு ஆய்வுக்குழு கூட்டம் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் ஷ்ரவன் குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு விவசாய, தொழில், கல்வி கடன்கள், மானிய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்பட பல்வேறு கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என வங்கி மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடனுதவி முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், புதிய தொழில்முனைவோர் என 13 திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒன்றிய அரசின் திட்டமான கிசான் கார்ட் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எந்தவித ஆவணங்களும் இன்றி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனுதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா? என கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைளை ஏற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடனுதவி வழங்கும் முகாம் நடத்த கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாட்கோ மற்றும் கிசான் கார்ட் ஆகிய திட்டங்களில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து கடனுதவிகளை வழங்கிட வேண்டும் என வங்கி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நலத்திட்ட உதவி
தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 9 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில் ரூ.78,500 மதிப்பில் 5 பேருக்கு இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் தண்டுவடம் பாதித்த 5 பேருக்கு சக்கர நாற்காலிகள், பார்வையற்ற மற்றும் காது கேளாதோர் 5 பேருக்கு ஆன்ட்ராய்டு செல்போன், 5 பேருக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால் ஆகியவற்றை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்ராயலு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், இந்தியன் வங்கியின் மண்டல துணை மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் வங்கி மேலாளர்கள், அலுவலர்கள் கலந்து