தமிழக செய்திகள்

தொழிலில் நஷ்டம் திருமண மண்டப உரிமையாளர் தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற் பட்டதால் திருமண மண்டப உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் நகை கடை மற்றும் திருமண மண்டபம் வைத்துள்ளார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஆனந்த கிருஷ்ணன் தனக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்