தமிழக செய்திகள்

தொழிலதிபரின் தாய் தற்கொலை

தொழிலதிபரின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

விருதுநகர் அருகே சிவஞானபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). தீப்பெட்டி தொழில் அதிபரான இவரது தாயார் தனலட்சுமி (85). இந்தநிலையில் முருகேசன் தனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் விருதுநகரில் உள்ள தனது வீடுகள் மற்றும் சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்றிருந்தார். வங்கியில் அடமானம் வைத்த சில சொத்துக்களை விற்றுவிட்டு ஒரு வீட்டை மட்டும் அடமானத்திலிருந்து மீட்க ஏற்பாடு செய்திருந்தா. இந்தநிலையில் வங்கி நிர்வாகம் முருகேசன் அடமானம் வைத்த சொத்துக்களை ஏலம் விட அறிவிப்பு வெளியிட்டது. இதனால் தனலட்சுமி மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனலட்சுமி மொத்தமாக 10 மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றவர் காலையில் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. உடனடியாக அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தனலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து