தமிழக செய்திகள்

கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார்.

தினத்தந்தி

நாகை,

நாகை மாவட்டம் கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் கஜா புயலால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் வீடுகளை இழந்த 10 பேருக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது.

இதனையடுத்து பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், நாகை மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன் முன்னிலையில் பயனாளர்கள் 10 பேருக்கும் புதிய வீடுகளின் சாவிகளை நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு