தமிழக செய்திகள்

லாரிகள் மூலம் அரிசி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

லாரிகள் மூலம் அரிசி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்திருக்கிறது. மளிகை கடைகளிலும், அரிசி மட்டும் விற்பனை செய்யும் கடைகளிலும் மிகக்குறைந்த அளவிலேயே அரிசி இருப்பு உள்ளது. இப்போதுள்ள அரிசி இருப்பு இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான் போதுமானது என்பதால், அடுத்த வாரத்தில் கடுமையான அரிசித் தட்டுப்பாடு ஏற்படும். அதேபோல் அனைத்து வகையான எண்ணெய், பருப்பு விலைகள் உயர்ந்திருக்கின்றன.

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அரிசி வருவது முற்றிலுமாக தடைபட்டு விட்டது. இத்தகைய சூழலில் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் இருந்து கிடைக்கும் அரிசியைக் கொண்டுதான் தமிழகத்தின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

ஆனால், அங்குள்ள அரிசி ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் அரிசி உற்பத்தி முழுமையாக தடைபட்டு விட்டது. இதுதான் விலை அதிகரிப்புக்கும் காரணங்கள் ஆகும்.

எனவே தட்டுப்பாட்டை போக்க பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, அந்த ஆலைகளில் இருந்து தமிழகம் முழுவதும் லாரிகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்