தமிழக செய்திகள்

"புறவழிச்சாலை பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் எ.வ.வேலு

கோவை, நாமக்கல் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கோவை, நாமக்கல் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, கோவை மாவட்டத்தின் மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்ததும் 250 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், இரண்டாம் கட்ட பணி 70 சதவீதமும் மூன்றாவது கட்டமாக நிலம் எடுக்கும் பணி 50 சதவீதமாக நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும் நிலம் எடுக்கும் பணிகளை விரைவுபடுத்தி சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை