தமிழக செய்திகள்

அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடி உடைப்பு

திருக்கோவிலூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

திருக்கோவிலூர், 

திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கோட்டை நோக்கி நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் அரசு பஸ் ஒன்று திருக்கோவிலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. செட்டித்தாங்கல் கிராம பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, 2 பேர் திடீரென அந்த பஸ்சை வழிமறித்தனர். பின்னா அவர்கள் பஸ் டிரைவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது அவர்கள் திடீரென பஸ்சின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இது குறித்து அரசு பஸ் டிரைவரான தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 44) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பஸ் கண்ணாடியை உடைத்து, டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தனியார் பஸ் ஊழியர்களான காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகன் ரவி (34) மற்றும் பணப்பாடியை சேர்ந்த அய்யனார் மகன் பன்னீர்செல்வம் (25) ஆகியோர் என்பது தொந்தது. . இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை