தமிழக செய்திகள்

சி.ஏ.ஏ.போராட்டம், கொரோனா வழக்குகள் வாபஸ்: முதலமைச்சர் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

சி.ஏ.ஏ.போராட்டம், கொரோனா வழக்குகள் திரும்பப்பெறுவதாக முதலமைச்சர் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு (சி.ஏ.ஏ.) எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றவர்கள் மீதும், கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீதும் இந்த 3 வகையான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் அவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் தான் இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் பா.ம.க. வலியுறுத்தி வந்தது.

இப்போது இந்த வழக்குகளை திரும்பப்பெறுவதாக முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது இந்த பாதிப்புகளை போக்கி உள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது