தமிழக செய்திகள்

மே 2-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அமைச்சர்கள் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 10, 11-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்