தமிழக செய்திகள்

மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு - மின்வாரியம் புதிய முயற்சி

நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையிலான செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவைகளை வழங்கும் முயற்சியை தமிழக மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையிலான செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் எனவும், இந்த செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண ரசீது ஒரு சில நிமிடங்களில் குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த செயலி வழங்கப்பட்டு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிடும் பணிகளை தொடங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செயலியின் சாதகங்கள் மற்றும் பாதகங்களை நுகர்வோரின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு