தமிழக செய்திகள்

கால்நடைகளுக்கு மலடு நீக்க சிறப்பு முகாம்

கால்நடைகளுக்கு மலடு நீக்க சிறப்பு முகாம்

தினத்தந்தி

பரமத்திவேலூர்:

பரமத்தி ஒன்றியம் கோதூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர், நில வள திட்டம் பகுதி-2-ன் கீழ் கால்நடைகளுக்கான சிறப்பு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் அருண் பாலாஜி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கலைச்செல்வி, அனிதா மற்றும் கால்நடை ஆய்வாளர் திருநாவுக்கரசு, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு குடற்புழு நீக்க மருந்துகளை கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு அளித்தனர். மேலும் சினை ஆய்வு, கருவூட்டல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகளை அளித்தனர். கன்று மற்றும் மடி நோய் மேலாண்மை குறித்த ஆலோசனைகளும், கன்றுகளுக்கு உப்பு கட்டிகளும் வழங்கப்பட்டன. இதில் கோதூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வந்தனர்..

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்