கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்

நெல்லை டவுன் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

நெல்லை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது 3-வது கட்ட பிரசாரத்தை தென் மாவட்டங்களில் தொடங்கினார்.

இதன்படி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, முத்தையாபுரம், முக்காணி, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.

பின்னர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பேராசிரியர்களுடன் நடந்த கலந்துரையாரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நெல்லை டவுண் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்று பிற்பகல் தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக துணை வட்டாட்சியர் விஜயா புகார் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு