தமிழக செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு

பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு நடைபெற்றது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கான வளாக தேர்வு நடைபெற்றது.

ஜோஸ்டெக் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆபரேஷன் மேனேஜர் பாஸ்கரன், மாணவர்களை நேர்முகத் தேர்வு செய்தார். 35 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வான 6 மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ரமேஷ் உள்பட பலர் பாராட்டினர்.

ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் செய்திருந்தனர்.