தமிழக செய்திகள்

தனியார் பள்ளிகளில் 3 மொழி கற்பிக்கப்படவில்லை என கூற முடியுமா? - தமிழிசை கேள்வி

எத்தனை அமைச்சர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அரசு பள்ளியில் படிக்கிறார்கள்? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், 'எக்ஸ்' சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் 7 மாநில தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். முதலில் உங்கள் எம்.பி.க்களை அவரவர் தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள். உள்துறை மந்திரி அமித்ஷா, தொகுதி வரையறையால் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பிறகும், தினந்தோறும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சினைகளை மறைப்பதற்கு இந்த பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். உங்கள் இரட்டை வேடம் எடுபடாது.

தமிழகத்தில் தனியார் பள்ளி குழந்தைகளுக்கு ஒரு கொள்கை, அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஒரு கொள்கை என்று வைத்திருக்கிறீர்கள். இதை முதல்-அமைச்சரால் மறுக்க முடியுமா? தனியார் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு, அரசு பள்ளி பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? அப்படி என்றால் எத்தனை அமைச்சர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அரசு பள்ளியில் படிக்கிறார்கள்? தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 3 மொழி கற்பிக்கப்படவில்லை என கூற முடியுமா?. அரசு பள்ளி குழந்தைகளை வஞ்சித்து, உங்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். இதை மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை