தமிழக செய்திகள்

தலைவராக வர முடியாது என்ற திருநாவுக்கரசருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி

தலைவராக வர முடியாது என்ற திருநாவுக்கரசருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் பற்றி முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஒரு போதும் வெளிப்படையாக பேசுவதில்லை.

ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் பதவி மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இளங்கோவன் தன்னை மட்டும் திட்டவில்லை, ப. சிதம்பரம், நளினி சிதம்பரம், தங்கபாலு, செல்லக்குமார் உள்ளிட்ட பிற தலைவர்களையும் திட்டி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும், ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என கூறினார்.

இந்த நிலையில், திருநாவுக்கரசருக்கு பதிலடி தரும் வகையில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் என் மீது வைத்திருக்கும் காதலை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. யார் தலைவராக வர வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

தமிழக காங்கிரஸை பலப்படுத்த கண்டிப்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி முடிவு செய்வார்கள். காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி ஏற்கனவே முடிவான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை