தமிழக செய்திகள்

பாலக்கோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

தினத்தந்தி

தர்மபுரி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி பகுதியில் சென்றபோது, மூசன் கொட்டாய் என்ற கிராமத்தில் உள்ள 2 தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த தோட்டங்களில் சோதனை செய்தபோது மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கு இடையே 5 கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்ததோடு அந்த தோட்டத்தின் உரிமையாளர்களான சங்கநாதன் (வயது 50), ஆனந்தன் (2) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்