தமிழக செய்திகள்

58 மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 58 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று (சனிக்கிழமை) 8 ரெயில்களும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 58 மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து ஆவடிக்கு இரவு 10.20, 11.45 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மூர்மார்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்