தமிழக செய்திகள்

1 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு

1 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

சென்னை,

கொரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ் நடைபெறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர்கள் நலன் கருதி, தற்போது நடைபெற்று வரும் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27-ந் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில் கொண்டு அனைத்து வகை வங்கி கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும். இந்த காலத்துக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுத்துறை வங்கி அதிகாரிகளை முதல்-அமைச்சர் அழைத்து பேச வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்