தமிழக செய்திகள்

மணிப்பூரில் தேவாலயங்கள் மீது தாக்குதல் : சேலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம்

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஜெய ராகினி அன்னை பேராலயம் சார்பில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

தினத்தந்தி

சேலம் 

மணிப்பூரில் நடந்த கலவரத்தில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டியும் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஜெய ராகினி அன்னை பேராலயம் சார்பில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

பங்குத்தந்தை அழகு செல்வம், உதவி பங்குத்தந்தை மைக்கேல் அருள்ராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலமானது, செவ்வாய்பேட்டையில் தொடங்கி சந்தைப்பேட்டை என முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஜெய ராகினி அன்னை பேராலயத்தில் நிறைவடைந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்