தமிழக செய்திகள்

மின்கட்டண உயர்வை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது.

தினத்தந்தி

ஏழை எளிய, நடுத்தர மக்கள், சிறு, குறு தொழில் நடத்துவோர் கடுமையாக பாதிக்கும் வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குளித்தலை காந்தி சிலை அருகே நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதற்கு இக்கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தோகைமலை பஸ் நிலையம் எதிரே நடந்த போராட்டத்திற்கு தோகைமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் கலந்து கொண்டு பசினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து