தமிழக செய்திகள்

திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - சம்பவ இடத்தில் 3 பேர் பலி

திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலே 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் பெள்ளிகாளிபாளையம் பகுதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மேதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

பேலீஸ் விசாரணையில், அவிநாசியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கொடுவாயில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று திரும்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்ததில், இரு சக்கர வாகனத்தில முன்னே சென்ற சாமிநாதன், பாப்பாத்தி ஆகியேர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததும், காரில் பயணித்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. காரில் இருந்த மேலும் 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது