தமிழக செய்திகள்

டயர் வெடித்ததால் தடுப்புச்சுவரில் மோதிய கார்: போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு

கார் டயர் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சென்னை,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 49). இவர், உடுமலைபேட்டை நகரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று தனது காரில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்து, தனது பதவி உயர்வு தொடர்பாக உயர் அதிகாரிகளை சந்தித்துவிட்டு விட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார்.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புலிக்குகை என்ற இடத்தில் கார் வரும்போது திடீரென காரின் வலது பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

பலி

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாட்டுக்குள் சிக்கிய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், காரின் இடிப்பாட்டுக்குள் சிக்கி இருந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலை பொக்லைன் எந்திரம் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு