சேலம்
திருப்பூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 6 பேருடன் சென்ற கார் ஒன்று சேலம் மாவட்டம் கரும்பூரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கார் மேம்பாலத்தின் கீழ் இருந்த தண்டவாளத்தை நோக்கி பாய்ந்து விபத்துக் உள்ளானது.
இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கரும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காருக்குள் சிக்கி தவித்த 6 பேரையும் மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் காரில் பயணித்தவர்கள் ராஜேஸ்குமார், பிரதாப், விஜய், கார்த்திக், யுவராஜ், மூவேந்தர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்கு சென்ற போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.