தமிழக செய்திகள்

இரணியல் அருகே ரெயில் மோதி கார் டிரைவர் பலி

இரணியல் அருகே ரெயில் மோதி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில்:

இரணியல் அருகே ரெயில் மோதி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தண்டவாளத்தில் பிணம்

நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கும், இரணியல் ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் காலையில் படுகாயங்களுடன் ஒரு ஆண் பிணம் கிடந்தது.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயில் மோதி சாவு

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் சுங்கான்கடை திருமலைநகரை சேர்ந்த ஆல்பர்ட் ராஜ் (வயது 32) என்பது தெரிய வந்தது. சம்பவத்தன்று நள்ளிரவில் அவர் மதுபோதையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நர்சு

பலியான ஆல்பர்ட் ராஜூக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். முருகேஸ்வரி சவுதி அரேபியாவில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் குழந்தையை ஆல்பர்ட் ராஜ் கவனித்து வந்தார். மேலும் கணவருக்கு அவர் கார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரை தான் அவர் வாடகைக்கு இயக்கி சம்பாதித்து வந்தார்.

இந்தநிலையில் ஆல்பர்ட் ராஜ் ரெயில் மோதி பலியான சம்பவம் குறித்து அவருடைய மனைவி முருகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளார். ரெயில் மோதி கார் டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்