தமிழக செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் திருட்டு

நாமக்கல்லில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான காரை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

கட்டிட ஒப்பந்ததாரர்

நாமக்கல்-மோகனூர் சாலை திருநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது61). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் தனக்கு சொந்தமான காரை கடந்த 12-ந் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் விழித்து பார்த்தபோது கார் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து சுப்பிரமணி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

திருட்டு போன காரின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து