தமிழக செய்திகள்

கார் கண்ணாடி உடைப்பு

தேனியில் கார் கண்ணாடியை உடைத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

தேனி சிவராம் நகரை சேர்ந்தவர் பட்டுமுருகன் (வயது 41). கார் மெக்கானிக். இவர் தனது காரை அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அந்த கார் கண்ணாடியை அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், ராமர், அல்லிநகரத்தை சேர்ந்த வீரு என்ற வீரபாண்டி ஆகியோர் உடைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்களிடம் பட்டுமுருகன் கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக தேனி போலீஸ் நிலையத்தில் பட்டு முருகன் புகார் செய்தார். அதன்பேரில் முத்துராஜ், ராமர், வீரு என்ற வீரபாண்டி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை