தமிழக செய்திகள்

வாகன விபத்தில் தச்சு தொழிலாளி பலி

வாகன விபத்தில் தச்சு தொழிலாளி பலியாகினார்.

தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே செம்மங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது65). தச்சு தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தஞ்சையில் நடந்த தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் வலங்கைமான் வழியே தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் கடைவீதியில் சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதை சரிசெய்த அதிகாரிகள் அந்த இடத்தில் மண்ணை கொட்டிமேடு அமைத்துள்ளனர். இதனை அறியாத பழனிசாமி எதிர்பாராதவிதமாக அந்த மண்மேட்டின் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றியபோது அருகில் இருந்த பெயர் பலகையில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். விபத்தில் பலியான பழனிசாமிக்கு சுசிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்