தமிழக செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கேரம் போட்டி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கேரம் போட்டி நடந்தது.

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கேரம் போட்டி நேற்று நடந்தது. பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய குறு வட்ட அளவில் 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக ஒற்றையர், இரட்டையர் பிரிவாக நடத்தப்பட்ட கேரம் போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான கேரம் போட்டியில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு