தமிழக செய்திகள்

கார்கள் மோதல்; 5 பேர் காயம்

கார்கள் மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

இளையான்குடி

சிவகங்கையை அடுத்த சூரக்குளம் அரசனி பகுதியை சேர்ந்தவர் மருது பாண்டியன்(வயது 60). இவர் தனது மகன் மணிகண்டன், மருமகள் முத்து பிரியா, பேரன் மருது சாஹியாத்(2), பேத்தி மகியாழினி(5) ஆகியோருடன் ராமநாதபுரம் மாவட்டம் ஓலையூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அதேபோல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்த நாலூர் கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு இளையான்குடி-சிவகங்கை சாலையில் வந்து கொண்டிருந்தார். இளையான்குடி அருகே பழங்குளம் விலக்கு என்ற இடத்தில் சென்றபோது 2 கார்களும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், மருது பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தனர். பூமிநாதன் குடும்பத்தினருக்கு எந்த காயமும் இல்லை. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து