தமிழக செய்திகள்

ஏரியூர் அருகேசாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்கு

தினத்தந்தி

ஏரியூர்:

ஏரியூர் 7-வது மைல் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்- சுமித்ரா தம்பதியின் 2 வயது மகன் ரோஷன் நேற்று முன்தினம் கார் மோதியதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதையடுத்து பிரசாந்த், சுமித்ரா உள்ளிட்ட உறவினர்கள் பென்னாகரம்- மேச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அத்துமீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஏழாவது மைல் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 50), சுந்தரம் (33), சிலம்பரசன் (30), நாகராஜ் (42), தனபாலன் (55), சுப்ரமணி (45), சேகர் (32), மணிகண்டன் (32), மாதையன் (32), செல்வம் (50), பிரசாந்த் (30), சுமித்ரா (26) ஆகிய 12 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்