தமிழக செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில்குடிபோதையில் வாகன ஓட்டிய 45 பேர் மீது வழக்கு

தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் விதம் ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைபோல் 6 இடங்களில் பணம் வைத்து சூதாடியதாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைத்து மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT