தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்ற 10 பேர் மீது வழக்கு

தினத்தந்தி

தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சில இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சில இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக 10 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மொத்தம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்