தமிழக செய்திகள்

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது

தினத்தந்தி

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரியூர் கிராமத்தில் உள்ள மலை மருதீஸ்வரர் முனிநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏரிகண்மாயில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் பகிரதன், ராமச்சந்திரன், முருகேசன், ராஜசேகரன், ஆறுமுகம் ஆகிய 5 பேர் மீது அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை