தமிழக செய்திகள்

ராணுவ வீரரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே ராணுவ வீரரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

பெரியகுளம் அருகே உள்ள பெரியக்காள் நகரை சேர்ந்தவர் சஞ்சீவிராஜன் (வயது 63), முன்னாள் ராணுவ வீரர். இவரது வீட்டின் அருகே வசிப்பவர்கள் விஜயராணி, ராஜ்குமார், நிர்மலா. சஞ்சீவிராஜனுக்கும், இவர்கள் 3 பேருக்கும் இடையே பாதை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் விஜய ராணி, ராஜ்குமார், நிர்மலா ஆகிய 3 பேரும் சேர்ந்து சஞ்சீவி ராஜன் வீட்டிற்குள் நுழைந்து அவரை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ்குமார் உள்பட 3 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்