தமிழக செய்திகள்

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வீரபாண்டி அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

வீரபாண்டி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரா (வயது 54). அதே பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (40). விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடையே நில பிரச்சினை தாடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது தர்மராஜ், அவரது மனைவி சித்ரா, மகன் பிரவீன் குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்திராவை தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பியால் தலையில் அடித்தனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் தர்மராஜ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...