கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 தலைவர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

தினத்தந்தி

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய போராட்டத்தில் வழக்குகளை வாபஸ் பெறுவதாக காவல்துறை கூறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு