தமிழக செய்திகள்

9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரம்: அரசு பள்ளியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரம் குறித்து அரசு பள்ளியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவர், தமிழ்பாட செய்முறை தேர்வின்போது பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி மாணவி தற்கொலை முயற்சி செய்த அரசு பள்ளிக்கு நேற்று சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரித்தார். பிறகு ஆசிரியர்களிடம் மாணவ, மாணவிகளின் உணர்வுகளை புரிந்து அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கினார். அப்போது பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளியின் மாடிகளில் சுவர்களின் இடையில் கிரில் தடுப்புகள் அமைத்து தர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்