தமிழக செய்திகள்

பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கு; அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை

பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரணை மேற்கொள்வதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கொன்றில் தமிழக அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பேருந்து ஒன்றின் மீது கடந்த 1998ம் ஆண்டு கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தமிழக விளையாட்டு துறை அமைச்சராக உள்ள பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் சூழ்நிலை உள்ளது. இந்த சிறை தண்டனைக்கு பின்பும் 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு