தமிழக செய்திகள்

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச்செல்லப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்பேது, ஸ்டாலின் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள், குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டமன்றத்துக்கு குட்கா பொருட்களை எடுத்துச் செல்லப்பட்டது.

சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, வழக்கின் விசாரணை இன்றும் தெடர்ந்து நடைபெறும் என அறிவித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்