தமிழக செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு: இன்று விசாரணை

ஐகோர்ட்டு பதிவுத்துறையில் வழக்கை தாக்கல் செய்ய நேற்று காலதாமதம் ஆனதால் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று காலையில் மூத்த வக்கீல் பட்டாபி ரகுராமன் ஆஜராகி முறையிட்டார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுப்பதாகவும், அதற்குள் வழக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும் கூறினா.

ஆனால், ஐகோர்ட்டு பதிவுத்துறையில் வழக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனது. இதனால், மாலை 4.45 மணிக்கு மூத்த வக்கீல் பட்டாபி ரகுராமன் ஆஜராகி, வழக்கை தாக்கல் செய்து விட்டதாகவும், விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், நேரம் கடந்து விட்டதால், இன்று (புதன்கிழமை) காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கித்தியோன் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்