தமிழக செய்திகள்

உற்பத்தி குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

உற்பத்தி குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணி பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். நன்கு விளைந்தவுடன் அதனை பறித்து உள்ளூர் பகுதிக்கு வரும் வியாபாரிகள் மூலம் டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் வாங்கிய மரவள்ளி கிழங்குகளை ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக ஜவ்வரிசிகளாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர்.

இந்நிலையில் உற்பத்தி குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் ரூ.12 ஆயிரத்திற்கும், சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ.13 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். நேற்று ஜவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கை ரூ.12 ஆயிரத்து 700-க்கும், சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு