தமிழக செய்திகள்

பள்ளி மாணவன் மீது சாதிவெறி தாக்குதல்.. ஏன் நடவடிக்கை இல்லை? - திருமாவளவன் கேள்வி

சாதிவெறி தாக்குதல் தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

சென்னை,

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில் 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தத்தை பள்ளியில் வைத்தே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவனை காணொளியில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அரசும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.