தமிழக செய்திகள்

காவிரி விவகாரம்; தமிழகம் முழுவதும் 5ந்தேதி முழு அடைப்பு போராட்டம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் 5ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். #MKStalin

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டையும் 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் காலஅவகாசம் முடிந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர் வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம் என தி.மு.க. சமீபத்தில் ஈரோட்டில் நடந்த மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. சார்பில் அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் தி.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டும் தே.மு.தி.க. கலந்து கொள்ளவில்லை.

கூட்டம் முடிந்து வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடையே பேசும்பொழுது, காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் 5ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களிலிருந்து காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தவும் உள்ளோம். சென்னை வரும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று 3ந்தேதி நடைபெறும் கடையடைப்பினை கைவிடும்படி விக்கிரமராஜை கேட்டுள்ளேன். முழு அடைப்பு போராட்டத்திற்கு அ.தி.மு.க.விற்கும் அழைப்பு விடப்படும். தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது என அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை