தமிழக செய்திகள்

காவிரி பிரச்சினை கடந்து வந்த பாதை

காவிரி பிரச்சினை குறித்த வழக்குகள் கடந்து வந்த பாதை.

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி பிரச்சினை குறித்த வழக்குகள் கடந்து வந்த பாதை வருமாறு:-

* 1990 மே: காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

* ஜூன்.2: காவிரி நடுவர் மன்றம் அமைப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

* ஜூன்: தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கிடையே, கர்நாடகத்தில் முழு அடைப்பு, போராட்டங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்தன.

* கர்நாடக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்டு. ஆனால் கர்நாடக அரசு இதனை ஏற்க மறுத்துவிட்டது.

* டிச.11: காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.

* 1998 ஆகஸ்டு: காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு காவிரி நதிநீர் ஆணையம் அமைத்தது.

* 2007 பிப்.5: காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், 1892 மற்றும் 1924 ஆண்டுகளில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சென்னை மாகாணம் மற்றும் மைசூரு சமஸ்தானத்துக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும், தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டது.

* 2012 செப்.19: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற 7-வது காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

* செப்.28: பிரதமரின் உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

* 2013 மார்ச் 19: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையீடு.

* மே.10: காவிரி மேற்பார்வை குழு அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

* மே.28: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிடாததால் ரூ.2,480 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையை கர்நாடக அரசு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.

* ஜூன் 12: தமிழக அரசு கேட்பது போல் தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று காவிரி மேற்பார்வை குழு தெரிவித்தது.

* 2017 செப்.20: மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை முடிந்ததும் இறுதித்தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

* 2018 பிப்.16: சுப்ரீம் கோர்ட்டு இறுதித்தீர்ப்பை வழங்கியது. காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்படுவதாகவும், கர்நாடகத்தின் பங்கு 284.75 டி.எம்.சி.யாக அதிகரிக்கப்படுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.