தமிழக செய்திகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தினத்தந்தி

மதுரை,

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக முதலில் விசாரணையை மேற்கொண்ட சிபிசிஐடி, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சீலிட்ட கவரில் சிபிசிஐடி அறிக்கையை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் சமர்ப்பித்தார்.

இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் சிபிஐ சிபிஐ தரப்பில் அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை. வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை என்று சிபிஐ வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்