தமிழக செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ வக்கீல் ஆஜராக உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ வக்கீல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு கோவை மகளிர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கடந்த மே மாதம் 13-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தீர்ப்பை எதிர்த்து 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய சிபிஐ வக்கீல் சுரேந்திரமோகனை, ஐகோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து