தமிழக செய்திகள்

சிபிஐ சம்மன்: விஜய் நாளை ஆஜராக வாய்ப்பில்லை என தகவல்

தவெகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜய் நாளை நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளார்.

சென்னை,

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே 2 முறை சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 2 முறை ஆஜராகி சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜல் பதில் அளித்தார். இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

இந்தநிலையில் தற்போது பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால்தான் அந்த தேதியில் பங்கேற்க இயலாது என்றும் அடுத்த 10 நாட்களுக்கு பிறகு சிபிஐ குறிப்பிடும் தேதியில் பங்கேற்க இருப்பதாகவும் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்க கோரியும் விஜய் தரப்பில் சிபிஐக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை சிபிஐ ஏற்குமா? ஏற்காவிட்டால் நாளை விஜய் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.