தமிழக செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15-ந்தேதி தொடங்குகிறது

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தொடங்கி நடைபெற இருப்பதாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்து இருக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

மாநில வாரிய பாடத்திட்டத்தின் கீழ் வரும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணையை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும், பெற்றோரும் இருந்து வந்தனர்.

சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நேற்று அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தொடங்கி நடைபெற இருப்பதாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்து இருக்கிறார்.அந்த வகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி தொடங்கி, மார்ச் மாதம் 13-ந்தேதி வரையிலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 2-ந்தேதி வரையிலும் நடக்க உள்ளது.அனைத்து தேர்வுகளும் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், சில தேர்வுகள் பிற்பகல் 12.30 மணி வரையிலும் நடைபெற இருக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து