தமிழக செய்திகள்

புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

புழல் சிறையில் கைதியிடம் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சிறை போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கஞ்சா வழக்கில் தாழம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ள சென்னையை அடுத்த நாவலூர் நத்தம் ஏரிக்கரை எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த கைதி வெங்கடேசன் (வயது 26) என்பவர் அறையின் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, சிறைக்குள் கைதி வெங்கடேசனுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? அவர் யாருடன் பேசிக் கொண்டிருந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்