தமிழக செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் செல்போன் கடையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

சிங்கப்பெருமாள் கோவில் செல்போன் கடையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு போன சம்பவம் கடையில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஜி.எஸ்.டி. சாலையில் செல்போன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் ஆடிட்டர் சில நாட்களுக்கு முன்பு கடையில் உள்ள செல்போன்களை கணக்கீடு செய்தபோது மொத்தம் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு போனது தெரிய வந்தது. செல்போன்கள் திருட்டு போனது சம்பந்தமாக கடையின் ஆடிட்டர் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பணிபுரியும் மேலாளர் உள்பட இருவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செல்போன் கடையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு போன சம்பவம் கடையில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்